#BREAKING | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி
ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுவார் என அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் இளங்கோவன் மோகன்ராஜ் எல்.கே. சுதிஷ் பார்த்தபாரதி அவர்களின் முன்னிலையில் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் செயற்குழு பொதுக்குழு இடைத்தேர்தல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு கட்சியினுடைய வளர்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்றது. மேலும் ஈரோடு கிழக்கு மாவட்ட இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாகவும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை வேட்பாளராக தேமுதிக நியமித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய மாவட்ட செயலாளர் கூட்டம் கேப்டன் அவர்கள் அறிவித்ததன் படி இன்று நடைபெற்றது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக எங்கள் கட்சியினுடைய நிர்வாகம் குறித்தும் உட்கட்சி தேர்தல் செயற்குழு பொதுக்குழு இடைத்தேர்தல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு கட்சியினுடைய வளர்ச்சி என அனைத்து விதமான ஆலோசனைகளும் இன்றைய மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அது மட்டும் இன்றி இனிவரும் காலங்களில் தேமுதிகவினுடைய பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது. ஆனாலும் உங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதுதான். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தனித்து களம் காண்கிறது என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.