Budget2024-அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதன் மூலம் பல நூற்றாண்டு கால கனவு நிறைவேற்றி இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க:Ram Temple inauguration – ஜெயலலிதா ராமர் கோயில் கட்ட விரும்பினார்..- டிடிவி!
எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.
இதனையடுத்து நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
Budget2024-ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையின் முக்கிய அம்சங்கள்:
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் தொடங்கப்பட்டது; நிலவின் தென் துருவம் அருகே பாரதத்தின் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது; சட்டசபை, நாடாளுமன்றத்தில் இனி பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
10 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலைமையை எட்டியுள்ளோம். கதர், கிராம பொருட்கள் விற்பனை 4 மடங்கு அதிகரித்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையை வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். 10 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1752940975515934832?s=20
ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. ஓபிசி பிரிவினருக்கு மருத்துவ படிப்புகளில் 28% இடஒதுக்கீடு வழங்கினோம்.
25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி பாதையை வகுத்து செயல்படுகிறது மத்திய அரசு.
ஜி20 உச்சி மாநாட்டு டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டுள்ளது;
புதிய சர்வதேச அமைப்புகள் உருவாக்கப்பட்டன; வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கனவு பல நூற்றாண்டுகளாக இருந்தது. இன்று இது உண்மையாகி இருக்கிறது. இந்த நீண்டகால கனவு நிறைவேறி குழந்தை ராமர் அயோத்தியில் கோவிலில் அமர்ந்திருக்கிறார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு பின்னர் 13 லட்சம் பேர் வழிபாடு செய்துள்ளனர். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.