உத்தரபிரதேசத்தில் இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஜலான் மாவட்டம், ஓராய் தெஹ்சில், கைத்தேரி கிராமத்தில், புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்
சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
2020 பிப்ரவரி 29 அன்று பண்டேல்கண்ட் விரைவுச் சாலையை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் அவர்களால் நாட்டப்பட்டது .இதனை தொடர்ந்து விரைவுச் சாலையின் பணிகள் 28 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, இப்போது பிரதமரால் திறந்து வைக்கப்படும்.
இந்த சாலை 296 கிமீ நான்கு வழிப்பாதை விரைவுச் சாலை உத்தரப் பிரதேச எக்ஸ்பிரஸ்வேஸ் இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (UPEIDA) மூலம் சுமார் 14,850 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும்.
தேசிய சாலை இணைப்புகளை மேம்படுத்துவதுடன், பண்டேல்கண்ட் விரைவுச் சாலை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், உள்ளூர் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.