ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக்கரையில் செயல்படும் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய
கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், ராமநாதசாமி கோயில் அருகே உள்ள அக்னி தீர்த்தக்கரையில் செயல்படும் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை இளம் பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார் .
இதையடுத்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனை செய்ததில் 3 ரகசிய கேமராக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள் – இந்தியாவுக்கு கோரிக்கை வைத்த வங்கதேசம்..!!
பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது உடை மாற்றும் அறையின் உரிமையாளர் ராஜேஷ் மற்றும் டீக்கடை மாஸ்டர் ஆகியோர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த நவம்பரில் 2 கேமராக்களும், டிசம்பரில் ஒரு கேமராவையும் பொருத்தியுள்ளனர் ஒரு மாதமாக இந்த இடத்தில் கேமரா வைத்திருந்தது காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.