enriched rice distribution : முறையான அறிவியல்பூர்வமான ஆய்வின்றி செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் எப்படி நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்?
மத்திய அரசு சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தைப் பொறுத்தவரைத் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நியாயவிலைக்கடை கடைகளிலும் , பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தின் கீழும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கக்கூடிய திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தடை செய்யக் கோரி சேர்ந்த கனிமொழி மணிமாறன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க : April 27 Gold Rate : தொடர்ந்து உயரும் தங்கம் விலை!
அவர்கள் அளித்த மனுவில் செறிவூட்டப்பட்ட உணவு ஒழுங்குமுறை சட்டப்படி, தலசீமியா, ரத்த சோகை இருப்பவர்கள் இரும்புச் சத்து அதிகம் கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ணும்போது, பாதிப்பு ஏற்படும்.
அதேபோல், தலசீமியா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படிதான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவிப்பு அரிசி பையில் இல்லை.
இவ்வாறு எச்சரிக்கை வாசகம் இடம்பெறாமல் விநியோகிக்கப்படுவதாகப் பல பிரச்சனைகளுக்கு வலுவாக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கனிமொழி மணிமாறன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளும் ஏப்ரல் 26 அன்று விசாரணைக்கு வந்தது enriched rice distribution.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் நடந்த விசாரணையில், தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அனைத்து நியாயவிலைக்கடை கடைகளின் முன்பும்,
தலசீமியா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப் படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளதால், பைகளில் தனியா எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்யத் தேவையில்லை என விளக்கம் அளித்தார்.
பின்னர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், எந்த அறிவியல் ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதாகவும், இதனைக் குறித்து நாடாளுமன்றத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “திட்டம் நல்ல திட்டம் என்றாலும் எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பைகளில் எச்சரிக்கை வாசகம் தேவை இல்லை என்றால் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படிக் கண்காணிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க : CM State Youth Award – விண்ணப்பிக்கும் முறை இதுதான்..! – உடனே பண்ணுங்க..