இந்திய திரையுலகில் இருக்கும் மிகவும் பேமஸ் ஆன நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலும் கால் தடம் பதித்து அங்கேயும் நல்ல நடிகர் என்ற பெயரையும் புகழையும் பெற்றுள்ளார் .
எண்ணற்ற ரசிகர்களை வைத்திருக்கும் குளோபல் ஸ்டார் தனுஷின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர் .
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார் . ஜான் கொக்கென், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமாரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.அங்கு படத்தின் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது .
இந்நிலையில் இப்படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது . முதல்பாகத்தின் கதை 1940-களில் நடப்பது போலவும் இரண்டாம் பாகம் 1990 களில் நடப்பது போலவும் அடுத்த பாகம் இப்போது நடப்பது போலவும் உருவாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை இப்படம் இந்த கதைக்களத்தில் பயணித்தால் தனுஷ் ரசிகர்களுக்கு இது செம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.