car accident- இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியைத் தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது 3 சூட்கேஸ்கள் கிடைத்தாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி.
இவர் தனது தந்தை சைதை துரைசாமியுடன் இணைந்து சைதை துரைசாமி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மனித நேய அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தனது நண்பர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார் .
அங்கு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: sutlej ஆற்றில் மாயமான வெற்றி! தகவல் அளித்தால் ரூ.1 கோடி-சைதை துரைசாமி!
அப்போது கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் (sutlej)
200 அடி சறுக்கி ஆற்றில் கவிழ்ந்து விபதுக்குள்ளனது(car accident).
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர்,
போலீசாருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1755471280177041585?s=20
மேலும் அவருடன் பயணம் செய்த நண்பர் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கபட்டார். இதனையடுத்து சிம்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால், காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியாமல் தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை,
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,சட்லஜ் ஆற்றில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியைத் தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது 3 சூட்கேஸ்கள் கிடைத்தாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் தற்பொழுது வரை வெற்றிதுரைசாமியின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
PUBLISHED BY : S.vidhya