காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட தவறிய திமுக அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வரும் 08-10-2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அரிதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம்தாழ்த்தி வரும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப்போக்கைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது .
நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் வரும் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் திடல் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது என நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.