தமிழக அரசு காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்(premalatha vijayakanth) கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் காந்திஜெயந்தி முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்திற்கு தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், மது ஒழிப்பை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்ததார்.
அப்போது காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், “காவிரி பிரச்சினையில், கர்நாடகத்தில் இருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அவர்களது உணர்வை வெளிப்படுத்துகின்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டத்தை கர்நாடகாவில் நடத்தி உள்ளன.
ஆனால், தமிழகத்தில் தமிழக முதல்வர் ஏன் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட கூட்டவில்லை? என்று கேள்வி எழுப்பினர். மேலும் கர்நாடகத்தில் இன்று காங்கிரஸ் தான் ஆட்சியில் இருக்கிறது. தமிழக அமைச்சர்கள் காவிரி விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியை சந்தித்து, கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி தண்ணீரைப் பெற்றுத்தர தமிழக முதல்வர் அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்ததார்.
மேலும் தமிழக விவசாயிகளைக் காப்பாற்றவும், தமிழ் உணர்வை நிலைநாட்டவும் தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.