திருவானந்தபுர விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அன்று சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்தனர்.இந்த சம்பவம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன், தூதரகத்தின் இன்னொரு ஊழியர் சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் 16 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் சில தினங்களுக்கு முன் கோர்ட்டில் ரகசிய வாக்கு மூலம் அளித்தார். அதில் தங்க கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி ஜலீல் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதென்று கூறினார்.
மணப்பெண் உள்பட 20 பேர் படுகாயம் ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். இந்நிலையில், வழக்கின் முதன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கடத்தலில் உண்மையில் ஈடுபட்ட நபர் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர் (கேரள முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர்) என உங்களது கவனத்திற்கு கொண்டுவர நான் விரும்புகிறேன்.
இதுபோன்ற உயர் பதவியிலுள்ள அதிகாரிகளால், என்னை போன்ற ஊழியர்கள் சிலர் இந்த நாசகர ஊழலுக்கு துணை நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான், என்னுடைய பணி மேலாளர்களின் உத்தரவுகளை பணிந்து ஏற்க மட்டுமே செய்தேன். ஏற்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் வழியே அதனை செய்தேன். இந்த விவகாரத்தில் கூற என்னிடம் ஒன்றும் இல்லை.
ஆனால் 15 மாதங்களாக என்னை சிறையில் அடைத்து ,காவல் துறையினர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.மேலும் சிவசங்கரை 3 மாதம் கூட தங்கவிடவில்லை.மேலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள அரசு அவருக்கு அரசு வேலை வழங்கி உள்ளது என ஸ்வப்னா குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை தேவை ஸ்வப்னா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.