மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம்வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒரே நாளில் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு அதாவது 2023-24 ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 17,2024 முதல் ஏப்ரல் 10, 2024 வரை நடத்தப்பட உள்ளது. அதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 15,2024 முதல் மார்ச் 21,2024 வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

தமிழகத்தில் மாநிலக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. அதே போல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 18ம் தேதி தொடங்க உள்ளது.