எடப்பாடி அருகே 15 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் செயல்பட்டு வரும் 30 தனியார் பள்ளிகளின் வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 239 வாகனங்களை ஒரே இடத்தில் கோட்டாட்சியர் தனிகாசலம், சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அந்த சோதனையில் 15 பள்ளி வாகனங்களின் பராமரிப்பு மற்றும் வாகனத்தின் நிலை சரி இல்லாததால் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
பின்னர் செய்தியர்களை சந்தித்த கோட்டாட்சியர்,மேலும், வேகக்கட்டுப்பாட்டு கருவி, சி.சி.டி.வி காமிரா, அவசர காலத்தில் வெளியேறும் வழி செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். படிக்கட்டுகளின் உயரம் பள்ளி குழந்தைகளுக்கு ஏறுவதற்கு தகுந்தவாறு இருக்கவேண்டும்.
ஒவ்வொரு பஸ்களிலும் முதலுதவி பெட்டி, தீ தடுப்பான் உள்ளிட்டவை கட்டாயம் செயல்படும் நிலையிலும், காலாவதியாகாமல் இருக்கவேண்டும் என்று உத்தவிட்டார்.