தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது..
அடுத்த 3 மணி நேரத்திற்கு திருவள்ளூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 21 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 29-ம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் 30-ம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக இருந்த நிலையில், அது தற்போது ஒருநாள் முன்னதாக வரும் 29ஆம் தேதி உருவாகக்கூடும்.
அதன்படி, வரும் 29-ம் தேதி உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெறும் என்றும், வரும் 28, 29 ஆம் தேதிகளில் கடலோர ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.