தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் மார்ச் மாதம் முதலே பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது.
எனினும் ஏப்ரல் மாதம் தொடங்கி வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இடியும் மின்னலுமாய் கொட்டித்தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவி வருகிறது.
இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.