38 வயதான நடிகை ஒருவர் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சந்திரா லக்ஷ்மண் தன்னுடன் நடித்து வரும் நடிகர் டோஷ் கிறிஸ்டியை திருமணம் செய்துள்ளார். மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை சந்திரா லக்ஷ்மண் தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஸ்வந்தம் சுஜாதா மலையாள சீரியலில் நடித்து வரும் சந்திராவுக்கும், அவருடன் சேர்ந்து நடிக்கும் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
38 வயதாகும் சந்திரா, இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலிருந்தார். இந்நிலையில், ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற மலையாள சீரியலில் நடித்து வரும் சந்திராவுக்கும், அவருடன் நடிக்கும் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தன் காதலைச் சந்திரா ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்,நேற்று முன்தினம்(10-11-21), கேரளாவில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். சந்திரா, டோஷுக்குப் திரையுலகினர் மட்டுமல்லாது இணையதளத்திலும் வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.