தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படங்களுள் ஒன்று சந்திரமுகி. கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது பி.வாசு இயக்கியுள்ளார்.
ஆஸ்கர் விருது வென்ற எம்.எம் கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (28.09.23) வெளியாகியுள்ள சந்திரமுகி 2 படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்களின் ட்விட்டர் கருத்துகள் :
“முதல் பாதி நன்றாக உள்ளது. வடிவேலுவின் காமெடி வேற லெவலில் இருந்தது. படத்தில் வடிவேலு தன் மேஜிக்கை மீண்டும் காட்டியிருக்கிறார். கங்கனா ரணாவத் படத்தின் இரண்டாம் பாகத்தில் வருகிறார். இப்படம் மாபெரும் வெற்றி பெருவது நிச்சயம்” .
“குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும்படியான படமாக உள்ளது சந்திரமுகி. முதல் பாதி நன்றாக இருந்தது. கங்கனா ரசிகர்களுக்கு எதிர்பாராத டுவிஸ்ட் இருக்கிறது. சர்பிரைஸ் காத்திருக்கிறது”.
“சந்திரமுகி 2 நல்ல ஒரு த்ரில்லிங் திரைப்படமாக இருக்கிறது. கங்கனா மற்றும் ராகவா லாரன்ஸின் ஆக்டிங் நன்றாக இருக்கிறது. இது ஒரு பக்கா குடும்ப படமாக இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்த இந்த படத்தை பார்க்கலாம்”.
சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பெரும்பான்மையான ரசிகர்கள் பாசிட்டிவான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். சந்திமுகி முதல் பாகம் போன்றே அதன் இரண்டாம் பாகமும் இருக்குமா என்பதை பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சந்திரமுகி 1 பாகத்தின் வசூலை சந்திரமுகி 2 முறியடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.