சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் சர்வதேச சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது சிலிண்டர் விலை 1000 ரூபாயை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த மானியத்தில் சில மாற்றங்களை செய்யலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
அதன்படி சிலிண்டர்களை வாங்கிய பின்னர் அதன் அடிப்படையில் மானியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.