மது போதையில் நாகராஜன் காவல்துறையினிடம் அலப்பறையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கால் முறித்து மருத்துவ மனையில் அனுமதிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் வேப்பஞ்சேரி பகுதியில் நாகராஜன் வசித்து வருகிறார்.
மாற்றுத்திறனாளியான நாகராஜன் சொந்தமாக சம்பாதித்து வீடு, தோட்டம் என வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வரும்போது காவல்துறையினர் வாகனத் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மது போதையில் இருந்த நாகராஜனை போலீசார் சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் இருந்த சாராயப்பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.பின்னர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திறக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து மது போதையில் இருந்த நாகராஜன் பெண் காவலரிடம் அலப்பறையில் ஈடுபட்டதால் காவல் நிலையத்தில் வைத்து நாகராஜனை விசாரணை மேற்கொண்டனர்.ஒரு கட்டத்தில் நாகராஜனின் அலப்பறை அளவுக்கு மீறியதால் காவல் துறையினர் அவர் செய்யும் செயலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களை பரவ விட்டனர்.
ஆனால் தற்பொழுது நாகராஜன் கால் உடைக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.இது குறித்து பேசிய நாகராஜன்,காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ரைட்டர் உள்ளிட்ட மூன்று பேர் காலை உடைத்து ஆட்டோவில் தூக்கி போட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டதாக கூறினார்.