சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் (Chennai Corporation Budget) கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கியது
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டு வருகிறார் .
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் கடந்த 19ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும, நேற்று வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார் மேயர் பிரியா ராஜன் .
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்று வரும் இந்த பட்ஜெட் தாக்களில் பள்ளிக் கல்வி உட்கட்டமைப்பு மேம்படுத்துதல்
புதிய சாலைகள், பூங்காக்கள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்த அறிவிப்புகள் மேயர் பிரியா ஒவ்வென்றாக வாசித்து வருகிறார் .
சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், 2 செட் சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
200 வார்டுகளிலும் பெண்களுக்கான “EmpowHER உடற்பயிற்சி கூடம்” அமைக்க சென்னை பட்ஜெட்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் ஒதுக்கீடு
Also Read : https://itamiltv.com/mnm-kamal-announcement-about-alliance-today/
2024-25 ஆம் கல்வியாண்டில் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு
ஒரு ஜோடி காலணி (Shoes), 2 ஜோடி காலுறை (Socks) வழங்கப்படும்
மாணவர்களுக்கு ஷூ, ஷாக்ஸ் வழங்குவதற்கு சென்னை பட்ஜெட்டில் ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு
2024-25ஆம் நிதியாண்டில் 255 (Chennai Corporation Budget) சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தலா 4 சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு பட்ஜெட்டில் ரூ.7.64 கோடி நிதி ஒதுக்கீடு