காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபர் TTF வாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது விலையுயர்ந்த பைக்கில் அதிவேகமாக சென்று வீலிங் செய்யமுற்பட்டபோது பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது .
இதையடுத்து அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் டிடிஎஃப் வாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர் .
சிறையில் இருந்த டிடிஎஃப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி பல முறை மனு அளித்த நிலையில் சில பல காரணங்களால் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்தனர் .
இந்நிலையில் ஜாமீன் கோரி மீண்டும் மனு அளிக்கப்பட்ட நிலையில் யூடியூபர் TTF வாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.