Site icon ITamilTv

சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!!

Spread the love

தெற்கு ரயில்வே சார்பில் நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணிகளால் சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ( southern railway ) இன்று முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு இரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தெற்கு இரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது இரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

26.04.2024 22.00 Hrs முதல் 03 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக பின்வருமாறு செயல்பாட்டிற்கு வரும்.

Also Read : தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அனுகு சாலை → வடக்கு கோட்டை சாலை (NFS Road) → R.A Mandram முத்துசாமி சாலை →Dr.முத்துசாமி பாலம் வாலாஜா பாயிண்ட் கொடி மர சாலை போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி ( southern railway ) சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும். அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Spread the love
Exit mobile version