தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவ்வப்போது உடற்பயிற்சி, மிதிவண்டி பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில், இன்று அடையாறில் உள்ள பிரம்மகான சபாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருவரும் நடை பயிற்சி மேற்கொண்டனர்.

அங்கு நடை பயிற்சியை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பொதுமக்கள் கலந்துரையாடினர். அப்போது நீங்கள் தான் முதல்வராக வேண்டும் என பலமுறை தாங்கள் விரும்பியதாக அவரிடம் தெரிவித்த பொதுமக்கள் முதல்வரின் பேரன் இன்பநிதி குறித்தும் பேசினார்கள்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடைய பேரன் இன்பநிதி அண்மையில் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ள நிலையில், அவர் நல்ல முறையில் விளையாட வேண்டும் என்றும் பொதுமக்கள் முதல்வரிடம் தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் நீங்கள் எப்போதும் மார்க்கண்டேயர் என்று கூற முதலமைச்சர் வெட்கப்பட்டு சிரித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.