கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவியதை அடுத்து அதனை பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து கொரோனா தொற்று குறைவடைந்து, கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா, ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மேலும் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுத்தியுள்ளார்.
அதில் தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும். கோவிட் கேர் மையங்களை திறந்து தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பரிசோதனை மையங்களை திறக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களை கூர்ந்து கண்காணித்து கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை ஆய்வு செய்ய வேண்டும். உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் அதில் கூறப்பட்டுள்ளது.