மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்காக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை உயிரிழந்தார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் முடிசூடா மன்னனாக இருந்து வந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது.அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்காக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அனைத்து விஐபி மற்றும் விபிஐபிக்களின் வாகனங்கள், காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம், கொடி பணியாளர் சாலை வழியாக அண்ணா சாலைக்கு தீவுத்திடலின் இடது நுழைவு வழியாக செல்லலாம்.
மற்ற மூத்த திரைக்கலைஞர்களின் வாகனங்கள் பல்லவன் சந்திப்பு வாலாஜா ரோடு வழியாக கொடி பணியாளர் சாலையை அடைந்து தீவுத்திடலை அடையலாம்.
தீவு திடல் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் வேறு சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.