பிரபல தமிழ் இயக்குநர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ் சினிமாவின் முண்ணனி இயக்குனர்களில் ஒருவரும் நடிகருமான சேரன், பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி, ‘ஆட்டோகிராஃப்’, உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள இவர், கன்னடத்தில் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இவரின் தந்தை பாண்டியன் இன்று அதிகாலை 6.30 மணியளவில் உயிரிழந்தார் என்ற செய்தி அவரது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் சினிமா ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான பழையூர் பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேரனின் தந்தை மறைவை அடுத்து சினிமா பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் பலரும் ஆறுதல்களும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.