10 ரூபாய் நாணயம் (10 rupees coin) செல்லும் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்று, 10 ரூபாய் நாணயம் வழங்கினால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்தது.
சமீப காலமாக இந்திய அரசின் 10 ரூபாய் நாணயத்தை பேருந்துகள், பெட்டிக்கடைகள், என பலரும் வாங்காத நிலையில், 10 ரூபாய் நாணங்களை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
10 ரூபாய் நாணயம் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்தும் புதுச்சேரியில் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்குவதில்லை.
இதனால் செல்லாத நாணயமாக புதுச்சேரி மக்களால் 10 ரூபாய் நாணயம் கருதப்பட்டது.
இதையும் படியுங்க https://itamiltv.com/sivakarthikeyan-starrer-ayalaan-movie-making-video/
தமிழகத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது. தமிழகத்திற்கு செல்லும் புதுச்சேரி மக்கள் அங்குள்ள வணிக நிறுவனங்கள் வழங்கும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை.
அப்படியே வாங்கினாலும் அங்கேயே அதை செலவழித்துவிட்டு புதுச்சேரிக்கு வரும் நிலையே நீடிக்கிறது. புதுச்சேரியில் இவை பெருமளவில் பயன்பாட்டில் இல்லை.
இந்த நிலையில், புதுச்சேரி மக்களால் வாங்க மறுக்கப்படும் 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர பகுதியிலுள்ள ஒரு தனியார் ஓட்டல் நிர்வாகம் சலுகை அறிவிப்பை வெளியிட்டது.
அதாவது காணும் பொங்கலன்று 10 ரூபாய் நாணயத்துக்கு (10 rupees coin) முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது.
இதன் காரணமாக புஸ்சி வீதி, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகிலுள்ள அந்த ஓட்டல் முன்பு இன்று மதியம் 12 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இதனால் 1 கிமீ தூரத்துக்கு பொதுமக்கள் அணிவகுத்து நின்றனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறாக 500 பேருக்கு அரை மணி நேரத்தில் பிரியாணி பொட்டலத்தை வழங்கிய நிலையில், சலுகை திட்டத்தை அந்த உணவகம் நிறைவு செய்தது.
இதன் காரணமாக 2 மணி நேரமாக வரிசையில் காத்திருந்த மீதமுள்ள மக்கள் ஏமாற்றமடைந்தனர்.