தமிழக அரசால் துவங்கப்பட்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயணம் குறித்த விவரங்கள் :
வரும் 29ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் முதல்வர் , அங்கு ₹30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்கை திறந்து வைக்கிறார்.
Also Read : திருப்பதில் சிறப்பு பூஜை – ஃபேஸ்புக் விளம்பரத்தால் நேர்ந்த சோக சம்பவம்..!!
இதையடுத்து வரும் 30ம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் முதலமைச்சர், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ₹37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் வரும் 31ம் தேதி காலை திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, கன்னியாகுமரியில் நடைபெறும் வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .