மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பேரழிவாக இருக்கும்என்று நிர்மலா சீதாராமன் கணவர் சொன்னதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராமநாதபுரத்தில் திமுக சார்பில் வாக்குச் சாவடி முகவர் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி,எம்பி கனிமொழி துரைமுருகன்,ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ;
”ஜெயலலிதா சேலை இழுப்பு சம்பவம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
மேலும் சொந்த கட்சியில் இருப்பவர்களை சொல்ல கூடிய அளவிற்கு அங்கு தலைவர்கள் இல்லாத காரணத்தினால் தான் பிரதமர் மோடி மாற்று கட்சி தலைவர்களை கடன் வாங்கி விமர்சிப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் எம்பி கனிமொழி சிலப்பதிகாரத்ததை சுட்டிக்காட்டி பேசியதால் தான் சிலப்பதிகார புத்தக முன்னுரையை சீதாராமன் இப்பொழுது தான் வாசிக்க உள்ளார்.அதனை அவர் முழுமையாக படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், இப்பொழுது நேரம் இல்லையென்றால் ஆட்சி மற்றதிற்க்கு பிறகு அவருக்கு ஓய்வு கிடைக்கும் அப்பொழுது முழுமையாக படிக்க நேரம் கிடைக்கின்றோம் சுட்டிக்காட்டி இருந்தார்.
அதற்கு முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடைய கணவர் பிரகலா பிரபாகர் எழுதிய ”குரூப் டெம்பர் ஆஃப் நியூ இந்தியா” என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர்கள் அனைவரும் அதை படிக்க வேண்டும். என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மீண்டும் பாஜக ஆட்சி ஆட்சிக்கு வந்தால் அது நாட்டிற்கு பேரழிவாக இருக்கும்.சட்டமன்றத்தில் ஜெயலலிதா நடத்திய நாடகத்திற்காக நீலீ கண்ணீர் வடிக்கும் நிர்மலா சீதாராமன்.. மணிப்பூரில் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட பெண்களை பார்த்து என் கண்ணீர் விடவில்லை.
மணி நேரமாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமருக்கு மணி போர் என்கின்ற என் நினைவிற்கு வரவில்லை. எதிர்க்கட்சிகளின் வெளிநாட்டிற்கு பிறகு சில மணி நேரங்கள் மட்டுமே மணிப்பூர் விவகாரம் குறித்து பேசி இருக்க
நாடாளுமன்றத்திற்கு வருவது புறக்கணிப்பதையும் மணிப்பூர் பற்றி பேசுவதையும் பிரதமர் மோடியின் பின்னடைவை காட்டுகிறது
மேலும் இந்த விவகாரம் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்