ஓய்வுக்கு பிறகு சில முக்கியமான பொறுப்புகளை இறையன்பு ஐஏஎஸ் அவர்களிடம் கொடுக்க அரசு முயற்சி செய்த நிலையில், ஓய்வுக்கு பிறகு தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
எழுத்தாளர், நேர்மையாளர்,சிறந்த பேச்சாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட முத்த அதிகாரி ஓய்வுக்குப் பிறகு அரசு தர முன்வந்த தமிழ்நாட்டின் முக்கிய பதவி துச்சம் என நினைத்துத் தூக்கி எரிந்து இருக்கிறார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு முதலமைச்சர் முக ஸ்டாலின் யாரைத் தலைமை செயலாளராக நியமிக்கப் போகிறார் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதிமுக ஆட்சியில் ஓரம் கட்டப்பட்டு இருந்த இறையன்பு இருந்தார்.
எந்த ஒரு அழுத்தத்திற்கும் அழுத்தம் கொடுக்காதவர், மக்களின் மனநிலையை அறிந்தவர், அதோடு மக்களின் மனித நேயம் கொண்ட பண்பலரான அவரை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமை செயல் அதிகாரியாகத் தேர்வு செய்தார்.
இதனை எதிர்க் கட்சிகள் பெரிதும் வியந்து பார்த்தனர். ஆட்சி அமைந்தது முதல் இரவு பகல் பாராமல் மக்கள் நலத் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதும், சமூக வலைத்தளங்களில் ஏதேனும் புகார்கள் வந்தால் அதனைத் திரவிசாரித்து நடவடிக்கை எடுப்பதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தவர் இறையன்பு.
இந்த மாதத்தோடு ஓய்வு பெற இருக்கிறார்.அர்ப்பணிப்பு, நேர்மை, பெரிய பதவியில் இருக்கிறோம் என்று நினைக்காமல் களத்தில் இறங்கி பணியாற்றும் அவரை விட்டு விட வேண்டாம் என்று நினைத்த அவரை முதலமைச்சர் முகஸ்டாலின்,
அவரது ஓய்வுக்குப் பிறகு தமிழ் நாட்டின் மிக முக்கிய பதவியான தலைமை செயலாளருக்கு நிகரான தலைமை தகவல் ஆணையர் பதவியைக் கொடுக்க நினைத்தார்.
ஆனால் இறையன்புவோ ஓய்விற்குப் பிறகு எந்த பதவியும் வகிக்கக் கூடாது என்று தனது கொள்கையில் உறுதியாக இருந்த அவர் அரசு தரமுன் வந்த தகவல் தலைமை ஆணையர் பதவியை வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
அதோடு தனது ஓய்வுபெறும் நாள் நெருங்கி வருவதால் இதுவரையில் தனக்குப் பரிசாக வந்த அணைத்து புத்தகங்களையும் மாணவ மாணவிகளுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் இறையன்பு தலைமை செயலாளராக பதவி ஏற்றபோது அதிகாரிகளுக்குச் சுற்று அறிக்கை அனுப்பினார் அதில்,நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன்.
அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன்.
நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன்.
எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது.
அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.
இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வருவிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.