ஹைதராபாத் அருகே மகன் நிற்பதை கவனிக்காமல் காரை இயக்கிய தந்தையால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்பி நகரில் உள்ள குடியிருப்பின் அருகே நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், குடியிருப்பின் கீழே நிறுத்தப்பட்டுள்ள காரை சிறுவனின் தந்தை எடுக்க வருகிறார். அவரை பின் தொடர்ந்து 4 வயது மகனும் ஓடி வருகிறான்.
ஆனால், அந்த தந்தை மகன் வருவதை கவனிக்காமல் காருக்குள் சென்றுவிட்ட நிலையில் சிறுவன் காரை சுற்றி அங்குமிங்குமாய் ஓடுகிறான். பின்னர் காரின் முன் பகுதியில் வந்து நின்றபோது, சிறுவனின் தந்தை அதை கவனிக்காமல் கரை முன் பக்கமாக இயக்கியுள்ளார்.
அப்போது கார் சிறுவன் மீதி ஏறி இறங்கியது. சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட தந்தை காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து சிறுவனை தூக்கிக் கொண்டு குடியிருப்புக்குள் ஓடுகிறார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
https://twitter.com/SpaceAuditi/status/1462997872186572801?s=20