குழந்தைகள் நலனை காப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகள் மைம் (மௌனமொழி நாடகம்) நாடகம் செய்து காட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அருண் ரெயின்போ காப்பகம் ”குழந்தைகள் உரிமைகள் வாரத்தை” முன்னிட்டு
குழந்தைகள் தினம் சென்னை எழும்பூரில் உள்ள இக்ஸா மையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நலனை காப்பதற்காக குழந்தைகள் நலத்துறைக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
குழந்தைகள் நலத்துறை ஆணையத்திற்கான கோரிக்கைகள்:
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், குடும்பத்திலிருந்து வெளியேறிய குழந்தைகள்தெருவோரங்களில் குப்பை சேகரிக்கும், பிச்சை எடுக்கும் குழந்தகள், வீடற்று தெருக்களில் வசிக்கும் குழந்தைகள்
கொத்தடிமையால் பாதிக்கப்பட குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், பெற்றோர், உறவினர்கள் மற்றும் பாதுகாவளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள்.
தவறுதலாக குடும்பத்திலிருந்து வெளியேரிய குழந்தைகள், சிறை குற்றவாளிகள், தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்கள், பாலியல் தொழிலாளி மற்றும் கட்டாய குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளின் கல்வி உள்ளீட்ட நல்வாழ்வு மேம்பாட்டுக்கான சேவையை அருன் ரெயின்போ காப்பகம் 2012 லிருந்து செய்துவருகிறது.
பல்வேறு குடும்ப பொருளாதார, சமூக சூழலால் பாதிக்கப்பட குழந்தைகள் அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும்போது முறையான ஆவணங்கள் இல்லாததால் மிகப்பெரும் சிக்கல்களை சந்திக்கின்றனர்.குழந்தைகளின் பெற்றோர்களிடம் சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் மற்றும் இருப்பிடச்சான்றிதழ் போன்ற அடிப்படை உரிமை ஆவணங்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் சேர்க்கப்படும்போது பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர்.
குறிப்பாக பிறப்புச்சான்றிதழ் குழந்தையின் முதன்மை அடிப்படை தேவையாக உள்ளது. பெற்றோர்களின் அறியாமையால் பிறப்புச்சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கு காலம்கடந்து பிறப்புச்சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரும் நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.ஆதலால் அவற்றிற்கேனும் மாற்று வாழிகாட்டல்களோ, ஆலோசனைகளோ வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாணவர்கள் பள்ளிக்கல்வியை முடித்தாலும் உயர் கல்வி சேர்க்கையின் போது மேலே குறிப்பிட்ட சான்றிதழ்கள் கட்டாய தேவையாக இருப்பதால் அத்தகைய மாணவர்களால் அரசு கல்லூரியில் கல்வியை தொடர முடியாத சூழல் நிலவுகிறது.இவர்களில் பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களாக இருப்பதால், அவர்களிடம் அரசு ஆவணங்கள் முறையாக இல்லாதபோது மாணவர்களால் உயர்கல்வியை எட்ட முடியாத நிலையே நிலவுகிறது.
பெற்றோர்கள் கல்வி, பொருளாதார சூழலில் பின்தங்கி இருப்பதால் இத்தகைய ஆவணங்களை அவர்களால் பாதுகாப்பாக வைத்திருப்பதில்லை இதனால் குழந்தைகளின் கல்வி சேர்க்கை பாதிக்கப்படுகிறது.
தொழில் காரணமாக இடப்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆவணங்கள் முறையாக இல்லாததால் குழந்தைகளின் கல்வி சேர்க்கை மிகப்பெரும் சிக்கலூக்குள்ளாகின்றனர்.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, இடைநிற்றல் அதிகமாகிறது.ஆதரவற்ற குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் எடுப்பதில் ஏற்படும் சிரமங்களை அரசு கவனத்தில் கொண்டு அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு DCPU ரமேஷ் கார்த்திக் மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவையும் கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.