உங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்களா? எச்சரிக்கும் மருத்துவர்கள்

children-drowning-in-smart-phone-Risk-of-seeing-a-psychiatrist
children drowning in smart phone Risk of seeing a psychiatrist

கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த  நிலையில் படிப்புக்காக ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இது குறித்த சம்பவம் ஒன்று பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த 15 வயதாகும் சிறுவன் ஒருவனுக்கு, பெற்றோர் முதன்முறையாக ஸ்மார்ட்போனை வாங்கிக் கொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து 6 மாதங்களில் சிறுவன் தினமும் 7 மணிநேரத்தை ஸ்மார்ட்போனில் செலவழித்திருக்கிறான்.

அதன் பின்னர், தூக்கமின்மை, சமூக தொடர்புகளில் இருந்து விலகல், படிப்பில் தோல்வி, மற்றும் கடும் கோபம், எரிச்சல் என சிறுவனின் நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த சிறுவனை, அவரது பெற்றோர் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.இதனை அடுத்து சிறுவன் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

children-drowning-in-smart-phone-Risk-of-seeing-a-psychiatrist
children drowning in smart phone Risk of seeing a psychiatrist

இச்சிறுவனை போன்று நாடு முழுவதும் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறும் மனநல மருத்துவர்கள், வாரத்துக்கு 10 சிறார்களாவது மனநல ஆலோசனைக்கு வருவதாக கூறுகிறார்கள். ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவதால் வெளியே சென்று விளையாடுவதை குழந்தைகள் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல்திறனை குறைத்து, அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டியது மிக முக்கியமானது.

Total
0
Shares
Related Posts