உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தை வீடியோ எடுத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் பகுதியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நட த்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது, வாகனம் ஒன்று வேகமாக புகுந்து விவசாயிகள் மீது மோதியது.
இந்த கொடூர சம்பவத்தில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரை ஓட்டியது ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது.
இந்நிகழ்வை கண்ட விவசாயிகள் ஆத்திரமடைந்து, அந்த காரை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர். மேலும் இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் 9 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்படும் நிகழ்வை வீடியோ எடுத்த ராமன் கோஷ்யப் என்ற பத்திரிக்கையாளர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பத்திரிக்கையாளரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் பலியான 9 பேரில் இந்த பத்திரிக்கையாளரும் ஒருவர் என பிரபல செய்தி நிறுவனமான நியூஸ் லாண்ட்ரி(The News Laundry) தெரிவித்துள்ளது.
Nine people, including journalist Raman Kashyap, were killed when violence erupted in #LakhimpurKheri on Sunday. Four of them were farmers.
An FIR has been filed against Union Minister of State for Home Ajay Mishra's son, Ashish Mishra.@NidhiSuresh_ reports. pic.twitter.com/ngzPtVf301
— newslaundry (@newslaundry) October 4, 2021