பிறப்பு விகிதம் சரிவு காரணமாக சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சலுகைளை அந்நாட்டு மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடான சீனாவில் தற்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரி செய்யும் வகையில் சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு விதிக்கபட்ட கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.
இந்த நிலையில் சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
மேலும் பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற தம்பதிகளுக்கு அதிகரித்த விடுமுறையை முன்னிலைப்படுத்தும் ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.