திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் தனுஷ்(dhanush) சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சாணிக்காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ஒரே நாளில் ட்விட்டர் பக்கத்தில் 100k லைக்குகளை குவித்து சாதனை படைத்தது.இந்த படம் இந்தாண்டின் இறுத்திக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அவர் மொட்டை அடித்த தோற்றத்தில் இருந்தார்.
கேப்டன் மில்லருக்கு பிறகு தனுஷ், சேகர் கம்முலாவுடன் இணைந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
D50 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தனுஷின் 50 வது ஒரு படத்திற்கான புதிய தோற்றம் என்று கூறப்படுகிறது. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.