AK 61 படமான ‘துணிவு’ வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
அதற்கு அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக இருந்த நிலையில்,
ஒரு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்திலிருந்து விலக்கப்பட்டார்.
அதனையடுத்து, அவரது AK 62 படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அஜித் ரசிகர்கள் AK 62 பட அறிவிப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
தற்போது, உலக பைக் பயணத்திற்காக நேபாளில் உள்ள அஜித் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு AK 62-வது படத்தின் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக படக்குழுவினருக்கு அறிவுறுத்திவிட்டார்.
இதனால், அஜித் 62 படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்குடன் அவரது பிறந்தநாளுக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது.
அந்த அறிவிப்பை அடுத்து, அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், லைகா நிறுவனம் இது குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது.
இந்த நிலையில், தற்போது AK 62 படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் இயக்குநரையும் உறுதிசெய்துள்ளது.
அதன்படி, லைகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர் “விடா முயற்சி” என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.