manjummel boys –‘மஞ்சுமெல் பாய்ஸ்’ போன்ற கிளாஸிக் ஹிட் படத்தைக் கொடுத்தற்காக இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்தப் படம் குறித்து தான் பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளன.
2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சௌபின் ஷாஹிர் , ஸ்ரீநாத் பாசி , பாலு வர்கீஸ் , கணபதி எஸ். பொதுவால் , லால் ஜூனியர் , தீபக் பரம்போல் , அபிராம் ராதாகிருஷ்ணன் , அருண் குரியன் , காலித் ரஹ்மான் , சந்து சலீம்குமார் மற்றும் விஷ்ணு ரெகு ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் கமல்ஹாசனின் குணா படமும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலும் மிகச்சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ் படம் நான்கு நாட்களில் ரூ.14.75 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி என்ற நிலையில் படம் வசூலை அள்ளியது.
இந்த நிலையில் ,’மஞ்சுமெல் பாய்ஸ்’ போன்ற கிளாஸிக் ஹிட் படத்தைக் கொடுத்தற்காக இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு வெற்றியில் அதிர்ஷ்டம் முக்கிய பங்காக இருக்கலாம். ஆனால், உண்மையான அதிர்ஷ்டம் என்பது அசைக்க முடியாத ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மூலம் மட்டுமே நிலையாக இருக்கிறது. ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் ஒரே இரவில் சென்சேஷனலாக மாறிவிட்டது என சிலருக்குத் தோன்றலாம்.
ஆனால், இந்தப் படக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்காக நீண்ட காலம் சினிமாத் துறையில் போராடியுள்ளனர். இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் நடிகர் தீபக் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார்.
இதையும் படிங்க: “ அங்கீகாரம் அளித்த தமிழ்நாடு அரசு”-நடிகர் கௌதம் கார்த்திக் நெகிழ்ச்சி!
இந்தக் கதாபாத்திரத்திற்காக அபாரமான அன்பையும் தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றதற்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார். ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படம் மூலமாக தனது சினிமா பயணத்தை 14 வருடங்களுக்கு முன்பு தீபக் தொடங்கினார்.
அதன் பிறகு, ‘தட்டத்தின் மறையது’, ’தீரா’, ’ரேக்ஷாதிகாரி பைஜு’, ’கேப்டன்’ மற்றும் ’கண்ணூர் ஸ்குவாட்’ போன்ற பல ஹிட் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க:
அவரது சமீபத்திய வெளியீடான ’மஞ்சுமெல் பாய்ஸ்’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் சிதம்பரத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் தான் பொருத்தமாக இருப்பேன் எனத் தேர்வு செய்ததற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தீபக். மேலும், இயக்குநருக்கும் பார்வையாளர்களுக்கும், குறிப்பாக தமிழ் பார்வையாளர்களுக்கும், தனது நடிப்பை ஆதரித்து பாராட்டுவதற்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.