நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’ (lal salam). முன்னதாக, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களை இயக்கியுள்ளார்.
அதனைத் தொடந்து, தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் ‘லால் சலாம்’ (lal salam) படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னாள் ஹீரோயின் ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். லைகா இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வந்தது. தற்போது இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
மேலும், ‘லால் சலாம்’ படத்தில், கௌரவ வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயரை, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் மும்பை பின்னணியில் இஸ்லாமிய தோற்றத்தில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், “மொய்தீன் பாய்” ஆட்டம் ஆரம்பம் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த போஸ்டரில், சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் எனவும் பதிவிட்டுள்ளனர்.