தற்போது படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்துவது, நிகழ்ச்சிகளுக்கு செல்வது என பிஸியாக இருக்கிறார் நடிகை தமன்னா .

தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமாகி, அதனித் தொடர்ந்து படிக்காதவன், பையா, சிறுத்தை, அயன், சுறா, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானவர் தமன்னா.

கிசுகிசுக்களில் சிக்காத நடிகைகள் பட்டியலில் தமன்னாவும் ஒருவர். அந்த வகையில், நடிப்பால் மட்டுமே பேசப்பட்டு வந்த நடிகை தமன்னா தற்போது திருமணம் குறித்து பேச்சிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

அதாவது, நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவின் காதல் பற்றி வெளியான தகவலின்படி, பாலிவுட்டில் கவனம் பெற்ற நடிகராக இருந்து வரும் விஜய் வர்மாவும், நடிகை தமன்னாவும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற படத்தில் நடித்தபோது காதலில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவருமே தங்களின் காதலை வெளிப்படையாக உறுதி செய்ததைத் தொடர்ந்து, தற்போது இருவரும் ஜோடியாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, ஒன்றாக நேரத்தை செலவிடுவது என தங்கள் உறவை வலுப்படுத்தி வருகின்றனர்.

இதனால், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்வி மழை எழுந்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையே, அவ்வப்போது வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்திவரும் தமன்னா, இந்தமுறை தங்க நிறத்தில் வித்யாசமான உடை ஒன்றை அனைத்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.