வரும் அக்டோபர் 4-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது.
ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. மேலும் படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கதை விவாத பணிகள் முடிவடைந்து நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்தது.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிக்க பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 19ஆம் தேதி படப்பிடிப்பை சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த தேதியில் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
இதனால், வரும் 4ம் தேதி திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் அதற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்தின் 170 படமான இதில் அனிருத் இசை அமைக்கிறார். ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் அனிருத்தின் இசை பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.