TTF வாசன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவையைச் சேர்ந்த வாசன் என்ற டிடிஎப் வாசன் பைக் பயணம் செய்வதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிட்டு வருகிறார்.சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த டிடிஎப் வாசனுக்கு தற்போது தற்போது ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
அவர் செல்லும் இடமெல்லாம் ர ஏதோ சினிமா பிரபலங்களை கான கூட்டம் கூடுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் TTF வாசன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையான ஒன்று.
இவர் நெடுஞ்சாலைகளில் அதிக விலையுயர்ந்த பைக்கை கொண்டு அதிக வேகத்தில் செல்வது போன்ற செயல்கள் இவரை முன்னுதாரணமாக கருதப்படும் இளைஞர்களுக்கு தவறானதாக அமையும் என சமுகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு டிக்டாக் புகழ் மற்றும் பிரபல youtuber ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து கோவை – பாலக்காடு சாலையில் அசுர வேகத்தில் சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் இயக்கியதால் வாசன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போன்று அவப்போது சாலைகளிலில் அதிகவேகமாக செல்வது, போக்குவரத்து விதிகளை மீறுவது,சாலைகளில் அதிக கூட்டம் கூட்டுவது போன்ற ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊட்டி மலை பகுதியில் TTF வாசன் அதிக வேகமாக சென்ற , இவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதாகவும்,ஆனால் TTF வாசன் அதனை பொருட்படுத்தாமல் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் அவரை மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர்.இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் ஊடகங்கள் இந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாகவும் இரண்டு சைலென்சர்கள் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பியதாகவும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசியஅவர், நான் படத்தில் நடிக்க இருப்பதாவதும்,எல்லாத்தையும் சந்திக்க போகிறேன் என்று தெரிவித்தார். மேலும் அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடராமல் இருப்பது எனக்கு அதிகம் வேலை இருப்பதால் தான் என தெரிவித்துள்ளார்.