கேரளாவில் சில்வர் லைன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
கேரளாவில் சில்வர் லைன் திட்டம் என்று சொல்லப்படும் அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான திட்டத்தை அமல்படுத்த கேரளாவின் கம்யூனிஸ்ட் கட்சி அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கி, எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கேரளாவின் வடக்கு மற்றும் தெற்குக் கடலோர மாவட்டங்களை இணைக்கும், அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான சில்வர் லைன் திட்டம், எளிதில் பாதிக்கக்கூடிய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பேரழிவை உண்டாக்கும் என்று கேரள சூழலியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#WATCH | A clash broke out between Congress workers & police while the political party's members were protesting against the Silver Line project in Kerala's Thiruvananthapuram pic.twitter.com/p5hB0uSojY
— ANI (@ANI) April 21, 2022