கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது 17 வயது மகள் ஸ்ரீமதி, சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியின் 3-வது மாடியில் இருந்து ஸ்ரீமதி கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.