அரசுத் துறையின் செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.நாளையும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் ஒன்றரை மணி வரை இந்த கூட்டம் நடைபெற்றது. அமலாக்கத்துறை மூலம் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்தும், ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் நிலை என்ன என்பது குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
முதல் நாளான இன்று நகராட்சி, நீர் வளம், மின் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டம் நாளையும் தொடர்கிறது.