உயிரிழந்த இராணுவ அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கடிதம்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

பிரிகேடியர் எல்.எஸ். லிட்டெர் உடலுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி, மு.க. ஸ்டாலின்
குன்னூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 பேரில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ராணுவ முழு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதற்கிடையே, நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்த அதிகாரிகள் உடல்களுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் உயிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தனித்தனியாக இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘‘கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள். ஈடு செய்ய முடியாத இழப்பில் இருந்து மிண்டு வர பலத்தையம், தைரியத்தையும் நீங்கள் பெற வேண்டும் என விழைகிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts