மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அப்போது கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சார்பில் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். அரங்கில் பேசியபோது விசில் பறக்க திமுகவினர் ஆரவாரம் செய்தனர்.
இந்த பேச்சின் போது, தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தார்.
அதில், மீனவ சமுதாய மக்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், தொடக்கத்தில் கொடுக்கும் பங்கை, திட்டம் முடியும் வரை தொடர வேண்டும்.
மாநிலத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் கொண்டுவர வேண்டும்.நீட் விலக்கு மசோதா சட்ட மசோதாவுக்கான அனுமதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.