புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (cm stalin) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள், அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
மழை பாதிப்புகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் பெய்த கனமழை மற்றும் நாளை மற்றும் நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
ஆலோசனையில் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகள், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருப்பது, மின்சார சேவை உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.