ஆரணியில் அசைவ ஓட்டலில் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சியை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.சமீபகாலமாக கெட்டுப்போன கூல்ட் ரிங்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது.
சவர்மா, பிரியாணி போன்ற உணவுகளாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது அதிகாரிகள் சோதனை செய்தாலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் தனியார் அசைவ ஓட்டல் இயங்கி வருகின்றன. இந்த ஓட்டலில் நேற்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிட்துள்ளனர்.
மேலும் மட்டன் பிரியாணி சாப்பிட்ட போது பிரியாணியில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடையின் ஊழியரிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வளைதலங்களில் பரவி வருகின்றது.
இதனை அடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் கண்துடைப்புக்கு ரெய்டு செய்யாமல் தொடர்ந்து ஆய்வு செய்து சுத்தமான முறையில் அசைவ உணவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்