கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த கொண்டைய பாளையம் லட்சுமி தோட்டம் பகவதியைச் சேர்ந்தவர் கோகுல் என்ற சுண்டி கோகுல். கொலை கொலை முயற்சி அடிதடி கஞ்சா கடத்தல் உள்ளிட்ட ஏழு வழக்குகளில் தொடர்புடைய கோகுல் மீது கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது.
கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாகக் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து விட்டு நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக வெளியேறும் தனது கூட்டாளியுடன் ஒரு கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் தலை,கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களைச் சரமாரியாக வெட்டியது.
இதனைக் கண்டு அருகிலிருந்து அவரது நண்பரான மனோஜ் என்பது தடுக்க முற்படவே அவரையும் அவரையும் அறிவாளால் தாக்கும் vedio காட்சிகள் வெளியாகின.
இந்த நிலையில் பட்டப்பகலில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இருந்த போதிலும் இந்த கொலை சம்பவத்தைத் தடுக்க அவர்களால் முடியவில்லை.அதே நேரத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் மனோஜ் தலையில் வடிந்த ரத்தத்தைத் தனது துப்பட்டாவைக் கொண்டு கட்டி கட்டுப்படுத்தினார்.
தகவல் அறிந்தக்கு விரைந்து வந்த காவல் துறையினர் மனோஜ் மற்றும் மருத்துவமனைக்காக உயிரிழந்த கோகுலை உடலை கைபற்றி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
இந்த நிலையில் நீதிமன்றம் முன் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இதனை தொடர்ந்து குற்றவாளிகள் நீலகிரி மாவட்டத்தில் இருப்பதாக தகவல் வந்தது. மேலும் காவல் துறையினர் நீலகிரியில் அனைத்து இடங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்ததாக ஏழு பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ஹரி பரணி, கௌதம், அருண்குமார் ,ஜோஷ்வா ,தேவப்பிரியா, சூர்யா, ஆகியோர் கோகுலைக் கொலை செய்த கொலை குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த 7 பேரையும் தொடர்ந்து கோத்தகிரி காவல்துறையினர் கோவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்நிலையில் ஜோஷ்வா ஆகியோர் காவல் துறையினை தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற முயன்றதாகக் கூறப்படுகிறது இதனால் இருவரும் காலிலும் சுட்டுப் பிடிக்கப் பட்டதாக காவல்துறையினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாகப் பேட்டி அளித்த கோவை மாநகர் ஆணையர் பாலகிருஷ்ணன் கொலைக் குற்றவாளிகள் கோத்தகிரியிலிருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அப்பொழுது மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி முன்பாக கௌதம், ஜோஷ்வா ஆகியோர் திடீரென வாந்தி, தலை சுற்றல் ஏற்படுவதாகவும் , இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிவித்த நிலையில்,
அப்போது கவல்துறையினரை தாக்கி தப்பிச் செல்ல முயன்றதாகவும் அப்பொழுது அவர்களைப் பிடிக்க முயன்ற காவலர்களை அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்காப்பிற்காகக் காலில் சுடப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்