கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மற்றும் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே ஊடகங்கள், யூடியூப் சேனல்களில் தற்கொலை செய்து கொண்ட மாணவி குறித்த விவரங்கள் பகிரப்படுத்தப்பட்டது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து கோவை போலீசார் இப்போது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.